என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து
என்னைத் தாலாட்டிய மொழி
எனதருமைத் தாய் மொழி
என் இனிய தமிழ் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி
என்னை நான் தொலைத்த போது
என்னுள்ளே புதைந்த போது
எண்ணெய் ஆக மிதந்து என்
எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி
இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும்
இனிமையான கல்யாணப் பண் பாடினாலும்
இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய்
இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே
முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில்
முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும்
முகவரி இழக்காது இலக்கிய உலகில்
முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி
மங்காப்புகழ்ச் சங்கப் புலவர்களும்
அறநெறி தந்த ஆசான்களும்
புரட்சி முழங்கிய கவிஞர்களும்
கருத்தில் சிறந்த கவியரசர்களும்
எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி
எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி
என்னுடல் கருகிச் சம்பலாகினாலும்
என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி
-சக்தி சக்திதாசன், இங்கிலாந்து
Leave a Reply