எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கதி.சுந்தரம்
பெரியார்
ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும்
உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த
ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும்
உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள்
வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி
வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்;
இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல்,
எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க!
– கவிஞர் கதி.சுந்தரம்
Leave a Reply