புலிப்படை : pulippadai

எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம்!

பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய்க் கிடப்பதா?
சொல்லாண்டு தமிழினம் அடிபட்டுச் சாவதா?
பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா?
மெல்லத் தமிழ் இனம் இனிச் சாகுமா?

வெல்லாப் போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா?
எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம்
எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொறுக்குவோம்
கொல்லாக் குணம் இன்னும் தேவையோ?

எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ?
செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி
செல்‘லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்!
கல்லாய் நீயும் இருப்பதோ..!

கடவுளையும் துணைக்கழைப்பதோ!
மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை!
பொல்லாப்பகை விரட்ட – புலிப்
படையுடன் இணைந்திடு!

நல்லார் உலகைப் படைக்க நாமும் இணைவோம்
சொல்லார் எம் மீதொரு பழி
எதிர் காலத்தார் எல்லாம் எமதாகும்
எதிரியை அழித்திடத் திடம் கொண்டால்!

உலோக நாதன்‎