nandhikadal01

பார்வைக்காக விடப்பட்ட
போர்க்கருவிகள்
பாரிலிருந்து வந்த
இராணுவ மேதைகள்
மலைத்துப் போயினர்

கொள்ளிக்கட்டைகளாக
அள்ளி அடுக்கப்பட்ட
வித்துடல்களைச் சுமந்த
இயந்திர வண்டி

கொலைகாரக்கொடியவன் balachandiran01
இளம் பெண்ணை இழுத்து வருகிறான்
நிருவாணமாக வீரமாது
வித்தாகி விழுந்து கிடக்கிறாள்

படிந்த குருதியோடு
ஈரேழு வயதான எங்கள் பாலகன்
பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம்
பிஞ்சி மார்பில்
பஞ்சு ரவை வேட்டுககள்
ஏந்தியபடி வீரமரணம்

போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும்
அநியாயமான காட்சி
eezham-genocide.isaipiriya40இறந்த மங்கையின்
மார்பில் நல் குலம் பெறாத
நாசிக்காரன் காலை ஊன்றிய
புகைப்படம்

உயிருக்காய்ப் போராடும் எம் இனத்துன்
அழுகுரல்கள்
அவர்களைக் காப்பாற்ற அலையும்
அருமைத் தோழர்கள்

ஒற்றுமையாய் ஓர் இனம் வாழ
விடிவுக்காய் வீர களமாடிய
வீரப்புதல்வர்கள்
கல்லறைகள்
சிதைக்கப்பட்டு கிடக்கின்றன

விடிந்த தேசத்துக்கு
இருள் தந்த இரண்டர்கள்
நடந்த படுகொலைக்கு
இவர்களே காரணம்

ஒப்பாரி சத்தம் கேட்டு
ஒ நந்திக்கடலே
ஏன் மௌனமாய்ப் போனாய்
போரலையாய்ப் பொங்கி வந்திருக்கலாமே!nandhikadal03

 

நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=212049