கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2

தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை

     யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்

  செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்

          நடராசர்  கோவி  லுக்குத்

தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த

       கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /

   புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி

          மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் //

கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த

         தீச்சிதரும்  உரிமை  கோரல் /

    கருநாகம்  கரையான்புற்  றுரிமை

         தனைக்   கோருகின்ற  நிலையே ஒக்கும்  //

வல்லடியாய்  வழக்காடு  தீச்சிதரை

         வாலிறைவன்  கோவில்  விட்டே /

    வளர்தமிழ  நாட்டரசு  வெளியேற்றி

        மீட்டெடுத்தல்  வேண்டும் ! வேண்டும் !

               புலவர் பழ.தமிழாளன்,

      இயக்குநர்-பைந்தமிழியக்கம்,

                   திருச்சிராப்பள்ளி.

(காண்க: கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ?)