(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி)

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4

 பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப்
பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம்
சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல்
தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத்
தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர்
சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை
நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில்
நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3)

துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி,
செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்!
கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக்
கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்; வான
மண்டலமும் விரலசைவில் நடக்கும்! பூவாய்
மாரியும்நம் குரல்கேட்டுச் சுரக்கும்! இங்கே
விண்டதெலாம் விளைவிக்கும் வேகம் கொண்டால்
விடிகின்ற வேளைவரும்! விரைக வென்றார்! (4)

 

சந்தர் சுப்பிரமணியன்:

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்