காதல் — ஆற்காடு க. குமரன்

காதல்
காயப்படுத்தி விட்டுக்
களிம்பு பூசுவதும்
கட்டப்படுத்திவிட்டுக்
கண்ணீர் வடிப்பதும்
பாவம் செய்து விட்டு
மன்னிப்பு கேட்பதும்
துரோகம் செய்து விட்டு
துக்கம் கொள்வதும்
பாதிக்கப்பட்டவர்க்கு
பரிகாரம் அல்ல
நொடி நேரத் தவற்றுக்கு
நொண்டிச் சாக்கு
நொந்த மனம் தந்த
தண்டனை
பிராயச்சித்தம்
பிரியாத என் சித்தம்
ஏற்றுக்கொள்
குற்றவாளிக் கூண்டில்
கூனிக்குறுகி நான்!
இவண் ஆற்காடு க. குமரன் 9789814114

Leave a Reply