காதலிப்போம் எந்நாளும்!

காதலிப்போம் எந்நாளும்! – இலக்குவனார் திருவள்ளுவன் மேற்குறித்த கட்டுரையை என்ன வேண்டும் தளத்தில்(http://ennavendum.in/) காதலிப்போம் எந்நாளும்! தலைப்பைச் சொடுக்கிக் காண வேண்டுகிறேன்.

சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!        வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று ( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. “சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!“ எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன்.   வே.பாரதி          பொதுச் செயலாளர்  தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்          …

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016  காலை 10.00 – இரவு 10.00 கோயம்புத்தூர்    தமிழ்நாடு சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….

சாதி வெறி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் – சுப.வீ.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம் சுப.வீரபாண்டியன் அறிக்கை   அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராசு, விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.   இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து,…

ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே இறந்துவிழ. சிறுபயல் பிய்த்திட்ட‌ பாவை நான்…