தலைப்பு-காவிரி-நடிகை, தமிழ்மணி ; thalaippu_kaveri_nadigai_tha-re-thamizhmani

காவேரியா…? அது பழைய நடிகையாச்சே!

இந்தி அரசே!

கன்னட வெறியாட்டம்
மறைக்க வேண்டுமா?
பேரறிவாளனைத் தாக்கு!

விக்னேசு எழுச்சி
மறக்க வேண்டுமா?
இராம்குமாரை முடி!

வாக்காளர்களே! என
விளி!

புலால் உணவுப்
பொட்டலத்தையும்
சாராயத்தையும்
கண்ணில்காட்டு!

பிறகு சொல்லுவான்-
“காவேரியா…?
அது
பழைய நடிகையாச்சே?”

த.இரெ.தமிழ் மணி