சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!
சாக்காடு நாள்வரை யாம் மறவோம் !
கூடி எம் நாட்டில் களித் திருந்தோம்
குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம்
முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம்
முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம்
அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம்
அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம்
அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம்
அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம்
ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம்
ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம்
மாவீர ரீகம் வணங்கி நின்றோம்
மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம்
தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம்
தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்
வஞ்சகச் சூழ்ச்சியால் வாழ் விழந்தோம்
நெஞ்சகம் வெந்தே நிலை குலைந்தோம்
நாயிலும் விஞ்சி குதறப் பட்டோம்
சேயிலும் அஞ்சிக் கரு வறுந்தோம்
அக்கையைப் புணர்தல் கண்ணுற்றோம்
அன்னை பிணைத்துச் சூடு பட்டோம்
இரத்தச் சகதியில் தலை குளித்தோம்
மொத்தக் குவியல் பிண மானோம்
சாக்காடு நாள்வரை யாம் மறவோம்
சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!
Leave a Reply