சிறகினில் திசைகளையள!- முனைவர் அண்ணாகண்ணன்
முடிமுடிமுடி செயலே!
இனிதினிதினிதினிதினிதினிதினிது
எமதெமதெமதெமதெமதெமதெமது
அமுதமுதமுதமுதமுதமுதமுது
எமதெமதெமதெமதெமதெமதெமது
சரிசரிசரியென,சரிவரும்உலகு
சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
அரிதரிதரிதரிதரிதரிதரிது
சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
சிறகினில்திசைகளையளப்பதுமழகு
சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு
கருவுறுதிருதருவரகவிமதுரம்
துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்
கடகடபடபடமடமடவெனவே
சடசடதடதடகிடுகிடுவெனவே
உடனுடனுடனுடனுடனுடனுடனே
முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே!
நன்றி – வல்லமை (http://www.vallamai.com/?p=55610)
Leave a Reply