எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்திரி பூபதி, முனைவர் செல்வன்  முதலான ஆசிரியர் குழுவினர், வழங்கிச் செயற்பாட்டாளர் ஆமாச்சு, தளச் செயற்பாட்டாளர் சீனிவாசன்,  அறிவுரைஞர்கள்,  எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள்  முதலான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்   8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள்காணாட்டப்…

“கருமவீரர் காமராசர்” கட்டுரைப் போட்டி – வல்லமை

  உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கருமவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.   இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்….

சிறகினில் திசைகளையள!- முனைவர் அண்ணாகண்ணன்

முடிமுடிமுடி செயலே! இனிதினிதினிதினிதினிதினிதினிது எமதெமதெமதெமதெமதெமதெமது அமுதமுதமுதமுதமுதமுதமுது எமதெமதெமதெமதெமதெமதெமது சரிசரிசரியென,சரிவரும்உலகு சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது அரிதரிதரிதரிதரிதரிதரிது சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு சிறகினில்திசைகளையளப்பதுமழகு சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு கருவுறுதிருதருவரகவிமதுரம் துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம் பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம் மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம் கடகடபடபடமடமடவெனவே சடசடதடதடகிடுகிடுவெனவே உடனுடனுடனுடனுடனுடனுடனே முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே!   நன்றி – வல்லமை (http://www.vallamai.com/?p=55610)

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…

வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி

  அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…