தனித் தமிழீழம் வேண்டும்!
தமிழீழம்
எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு ஏந்திய கைகள் – தமிழ் வெண்பாக்கள் இயற்ற வேண்டும். குண்டு விழுந்த கானகங்களில் – குயிலின் கானம் கேட்க வேண்டும். ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை – எந்நாளும் தமிழினம் போற்றிப் பாட வேண்டும். மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் – இனியாவது மனிதம் மலர வேண்டும். தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். |
அன்பு நிறை நண்பருக்கு வணக்கம்,
தங்களைப் போன்றவர்களின் கடும் முயற்சியால்தான் தமிழுக்கு ஏற்படும் இன்னல்கள் தடுக்கப்படுகின்றன, தங்களின் சோர்விலா முயற்சியும் தளர்விலா உழைப்பும் தமிழுக்குத் தடுப்பரண்களாய் இருக்குமென்பது திண்ணம், தங்களின் கைம்மாறு கருதாப் பணிக்குப் பாராட்டுகள்,
– முக்கண்ணன் முனியன்