தலைப்பு-தமிழர்க்குஉயிர், பாரதிதாசன் : thalaippu_thamizharkku_uyir+bharathidasan_uloganathan

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

உலோகநாதன்- க.உலகநாதன் : loganathan_ulaganathan

(உ)லோக நாதன்