தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே
தம்முயிர் மூச்செனும்
திருவள்ளுவன் – செந்
தமிழைப் போல தொன்மை மிகுந்த
தொண்டறம் செய்யும் திருவள்ளுவன்
வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று
வாழு கின்ற
திருவள்ளுவன் – திரு
வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால்
வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன்
ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும்
அன்பர் அறிஞர்
திருவள்ளுவன் – தமிழ்
நோக்கம் ஒன்றே தம்பணி என்று
தளரா துழைக்கும் திருவள்ளுவன்
எளியர் தூயர் எப்பணி யாகிலும்
எழிலாய் செய்யும்
திருவள்ளுவன் – தமிழ்ப்
புலியர் வலியர் புடவி யெங்கும்
புகழ்பெறும் மதிஞர் திருவள்ளுவன்
இலக்குவனார் மகன் இவரென சொல்லுதல்
இயற்றமிழ் போல
இனியதாகும் – வாழ்வில்
இலக்கை வகுத்து இலக்கண மாக
இயங்கு கின்றார் வரலாறாகும்
– புதுவைத் தமிழ்நெஞ்சன்
Leave a Reply