தமிழ் அன்னை
அன்புருவான தமிழ் அன்னை – மொழி
அரசியான தமிழ் அன்னை
இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை – எங்கள்
இன்னுயிரான தமிழ் அன்னை
ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் – இயல்
அழகு சொட்டும் பசு வளர்த்தாள்
வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் – ஞான
வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்.
– கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
Leave a Reply