தாயன்பும் தாய்த்தமிழும் – சாலை இளந்திரையன்
அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி
அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல
இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை
ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல
கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்
காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு
தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன்
தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன்.
– சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 14
Leave a Reply