துளிப்பாக்கள் – தமிழ் சிவா
துளிப்பாக்கள்
வற்றாது ஓடும்
இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம்
மதுக்கடை!
துருத்தி நின்றன எலும்புகள்
இறந்து கிடந்தது
ஆறு!
நச்சு நாசியைப் பிளக்க
கலங்கிக் கையற்று நின்றது
காற்று!
குடிசைக்குள் புகுந்த அமைச்சர்
கண்கலங்கினார்
அடுப்புப்புகை!
அடுத்த அறிவிப்பு
மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப்
பிதைக்கப் பணம் இலவசம்!
எந்தக் கடவுளிடமும்
சிறைமீட்க வேண்டுமென்று
யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!
வழக்கில் தோல்வி
பயந்து வாழ்ந்தன
பேருந்துகள்!
காக்கும் கடவுள்
உடைந்து போனார்
தீர்ப்பு நாளன்று!
இலவச அரிசி
நிறையப் பலனடைந்தார்கள்
பக்கத்து மாநிலத்தார்கள்!
Leave a Reply