துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!  …

தெளிந்தவர் வாக்கு

தெளிந்தவர் வாக்கு கொடுக்கப்பட்ட புகார்களை வரிசையாய் எண்களிட்டு வாகாய் அடுக்கிவைக்கும் காட்சிக் கூடமொன்று கண்டுகளிக்க உள்ளதெனக் கண்டவர்கள் சொன்னார்கள்! கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக் கழிபேருவகை எய்தியோர் களிநடம் புரிய அரங்குகள் அமைத்துத்தரும் ஆணையம் உண்டென்று அறிந்தவர்கள் சொன்னார்கள்! சீர்திருத்தம் எனச்சொல்லி ஓர்திருத்தமும் செய்யாத நாடறிந்த நல்லோரவை நம்நாட்டில் உண்டென்று நன்கறிந்தோர் சொன்னார்கள்! தப்படியும் சேப்படியும் ஒப்பில்லாமல் செய்தவர்கள் எப்படியும் வெற்றிபெற்றுக் கறைவாழ்வு வாழ்ந்திடவே கலங்கரை விளக்கமாய்க் கலங்காது பணியாற்றும் மெத்தபடித்த மேதையோரவை இத்தமிழ் நாட்டிலும் உண்டெனும் உண்மையைத் தெளிந்தவர்கள் சொன்னார்கள் தேர்தல் ஆணையமென்று! தமிழ் சிவா

கூடா நட்பு -தமிழ் சிவா

கூடா நட்பு ஆங்கிலப் புத்தாண்டை அமைவுறக் கொண்டாட அடுத்த நாட்டுக்குப் போகும் அ“று”ந்தகையே! அரிசனர் வீட்டிலே அரிசிச் சோறுண்டால் ஆகுமோ அனைவரும் இணைதான் என்றே? முட்டிலாக் காவலில் கட்டினில் உறங்கிய சுரங்கக் கோப்புகள் பிள்ளைக் கரிக்குச்சியோ? வெட்டிய வெளிச்சமும் திட்டிய வாய்களும் எட்டியாய் இருந்த இணக்கமும் இன்று வெற்றிலைக் காம்பாய் ஒட்டி இருப்பது வெட்டி எறிய அல்லால் வேறெதற்கு? -தமிழ் சிவா

புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா

புதிய வேந்தர்கள் சென்ற மாதம் செறிந்த பகலில் இருந்தன மணலும் இன்முக ஆறும் இந்த மாதம் எரிந்த பகலில் அடாவடி அரசியல் கயவோர் ஆற்றைக் கொன்றனர் மணலை அள்ளியே! நன்றி – பாரிமகளிர்: புறநானூறு-112 – தமிழ் சிவா  

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே!   சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…