தலைப்பு-யாவும்தமிழ் : thalaippu_yaavumthamizh

நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்!

 

இனிய தமிழ் என்றும் இனிக்கும்
தமிழ் கண்கள் பனிக்கும் தமிழ்
உழைக்கும் தமிழ் என்றும் தழைக்கும்
தமிழ் ஈழம் அழைக்கும் தமிழ்
மிளிரும் தமிழ் என்றும் குளிரும்
தமிழ் எம்மில் ஒளிரும் தமிழ்
தங்கத் தமிழ் என்றும்
சிங்கத் தமிழ் எங்கள் சங்கத் தமிழ்

செந்தமிழ் என்றும் பைந்தமிழ்
வாழ்வின் தேன்தமிழ்
ஆல் தமிழ் ஆழ் தமிழ்
அகிலம் ஆள் தமிழ்
உன் தமிழ் என்றும் உண்
தமிழ் தமிழனின் கண் தமிழ்
கல் தமிழ் சொல் தமிழ் மயக்கும் கள் தமிழ்

இப் பார் தமிழ் என்றும்
பாற் தமிழ் அன்பின்பால் தமிழ்
நீர்த்தமிழ் என்றும் நீ தமிழ்
கனல் பொங்கும் தீத் தமிழ்
வெண்மைத் தமிழ் என்றும்
பெண்மைத் தமிழ் பண்பின் உண்மைத் தமிழ்
அருமைத் தமிழ் என்றும்
பெருமைத் தமிழ் எங்களின் உரிமைத் தமிழ்

உயர் தமிழ் என்றும்
உயிர் தமிழ் எம்மில் பயிர் தமிழ்
இங்கு இனி நான் தமிழ்,
நீ தமிழ், யாவும் தமிழ்


கவிஞர் கல்முனையான்

http://www.lankasripoems.com/?conp=poem&pidp=209400