சிவகங்கை இராமச்சந்திரனார்:sivagangai_ramachanthiranar

காலத்தை வென்ற பகுத்தறிவுக் களஞ்சியமே!
சிவகங்கை தந்த இராமச்சந்திரப் புதையலே உனக்கு
இன்று காணுகின்ற நினைவுநாள் நான்கு!
கேடுதரும் பழைமையை நீக்கி விட
மேடுபள்ளம் பாராது சுற்றிய செம்மலே!

சமூகநீதி நிலைத்திடவும்
சமதருமம் தழைத்திடவும்
பொதுவுடைமை வளர்ந்திடவும்
மனிதநேயம் மலர்ந்திடவும்
இன உணர்வு வளரவும் வாழ்ந்தவரே!

நீ பம்பரமாய்ச் சுழன்று, உன்
உடல் நலத்தையும் பாராமல்
மருதுபாண்டியரைத் தூக்கிலிட்ட திருப்பத்தூரில்
மிசன் மருத்துவமனை சிகிச்சைப் பெறும்போது
ஈரக் கண்களோடு அமர்ந்திருந்தேன்!

நீ சாகும் தறுவாயில் சிந்திய  நெறிகள்
உன் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன
சுயமரியாதைச் சுடரொளிக்குச்
சாவே இல்லை அந்தத் தீப்பந்தங்கள்
வழித்தோன்றல் மூலம் தொடரும்!

Jeevanandham01-seevanantham

தோழர்சீவா

தாமரை , 26.02.1937
கொடைக்கானல் காந்தியின்

சிவகங்கை இராமச்சந்திரனார்,

பக்கம் 279