Jpeg

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)

 

காட்சி – 18

(நாடகக் காட்சி – 6)

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்

இடம்      :     பள்ளியறை

நிலைமை  :     (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ

தேடியே அதனை நினைக்கச் செய்ய

இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு

மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை

அருண்    :      வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே

பாலின் சுவையிருக்க!

கள்ளியவள் கன்னத்திலே

கனியின் சாறிருக்க!

மதியென வந்தாள்!

மதியே நானென்று!

சதிரென மொழிந்தாள்

சதிரே நானென்று

நோக்கினேன் தாழ்த்தினாள்

தாழ்த்தினேன் நோக்கினாள்

தாக்கினேன்! தழுவினாள்

பாக்கி நான் சொல்லவோ!

தொட்டவிழ்ந்த துகிலெங்கே?                                                                                                                                 கட்டவிழ்ந்த மலரெங்கே?

மொட்டவிழ்ந்த இதழெங்கே?                                                                                                                                   பட்டவிழ்ந்த சிலையவளா?

(காட்சி முடிவு)

 (பாடும்)

two-sparrows02