kurivigal82

காட்சி – 27

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்

இடம்      :     அருண்மொழி இல்லம்

நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண்

தாங்கா இன்பம் அடைகின்றான்)

அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு!

அணியவே இன்னும் நாழிதான் என்ன?

பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்!

துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்!

அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி!

ஓகோ! விண்மீன் வானுடை கட்ட!

எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்!

தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க!

தேவியே! கண்ணே! தேவியேதான்!

                            தாவியே அணைக்கத் தூண்டுதே முத்தே!

பூங்       :         கோவில் நாம் செல்வோம்! இப்போ!

                                               இராவிலே பார்ப்போம்! தப்போ!

 

(காட்சி முடிவு) 

பாடும்

 – ஆ.வெ.முல்லை நிலவழகன்