bharathidasan07

ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர்

இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர்

தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர்

தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர்

பாரதி தாசர் பான்மை பலப்பல

பாரும் அறியும் ஊரும் உணரும்

இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர்

கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்?

தமிழர் உணர்வறைப் போயது கண்டோ?

தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ?

இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ?

எதனால் புத்தேன் உலகம் புக்கார்?

எல்லாம் தெள்ளிதின் உணரும்

இறையே எமக்குச் செய்க உரையே.

– க.தி.நாகராசன்

– குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964