(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி)

இராவண காவியம்: பாயிரம்  21-25

வேறு

  1. படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும்

கடியுடையத் தமிழகக் காவல ராகவும்

வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய

முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம்.

  1. இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும்

அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு

தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங்

கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம்,

வேறு

  1. கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங்

கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து

தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த

வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே).

முப்பால்-வேறு

24.மெய்வ கைதெரி மேலவர் போலயாம்

செய்வ தின்னசெய் யாதன வின்னென

உய்வ கைமுழு தோர்ந்து பழந்தமிழ்

ஐயர் யாத்த வறத்தினைப் போற்றுவாம்.

  1. திருவுங் கல்வியுஞ் செய்தொழின் மேன்மையும்

மருவு நண்பு மருவலர் தன்மையும்

செருவு மாட்சித் திறன்முத லாகிய

பொருவி லாத பொருளினைப் போற்றுவாம்.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை

குறிப்பு:

  1. அலங்குதல்- தத்தளித்தல். கலங்குதல்-இல்

செயல் புரிதல்