தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.

(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.

(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3. 1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2

 (தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1. தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 ஆனால் அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊர்ப்புறத்தில் தங்கி மக்களோடு வாழ்ந்து மக்களோடு உழைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளையை ஏற்று அப்போதுதான் சில நாளாய்க் கூலிக்குக்  கரும்பு வெட்டப் போய்க் கொண்டிருந்தேன். வெட்டத் தெரியாமல் வெட்டிக் கரும்புத் தோகைகள் உடலெங்கும் கோடு கிழித்திருந்தன. கடின உழைப்புக்குப் புதியவன் என்பதால் உடம்பு கொதித்து வயிற்றுப் போக்கு வேறு வாட்டிக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே! குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம்  21-25 வேறு படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும் கடியுடையத் தமிழகக் காவல ராகவும் வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம். இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும் அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங் கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம், வேறு கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங் கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே)….

இராவண காவியம்:பாயிரம்: புலவர், அரசர்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 16-20 16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். புலவர் 17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். வேறு…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானைமுடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானைஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானைசென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானைநன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானைஅரசர்…

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’      ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)…

தமிழ்ப் புலவர்கட்கு வேண்டுகோள்

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு…