periyaar

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி

“இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர்

இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார்

பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம்

மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்!

பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்.

ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்

அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!

அவர்

வெண்தாடி அசைந்தால் போதும்

கண் சாடை தெரிந்தால் போதும்;

கறுப்புடை தரித்தோர் உண்டு

நறுக்கியே திரும்பும் வாள்கள் !!”

-கலைஞர் மு.கருணாநிதி (1945)

கலைஞர்

கலைஞர்