மறவாதே! 21.04.2019  

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்!

பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில்

மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை

பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித்

தண்ணிழல்போல் வாழ்க தழைத்து

எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல்

நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி

மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம்

கண்ணெனக் காத்துயர்வைக் காண்!

மணிமேகலை குப்புசாமி