பிரபாகரன்-அணிவகுப்பு :prapakaran_anivakuppu

ஈழவிடுதலை காண்போம்!

விடுதலை என்பது
விடுகதை அல்ல
வெற்றியும் எளிதல்ல

எலியாக நாம்
வளை தேடவில்லை
புலியாகிப் பகைவெல்ல
புறப்பட்டுவிட்டோம்

தடையினை உடைப்போம்
தலைவனை மதிப்போம்
மனதெங்கும் நிறைவான
மாவீரர் புகழ்பாடி
வெற்றிகள் குவிப்போம்

எடுபடையெனவே
படுகளம் ஆடும்
பகையது கொன்று
புதியதோர் சரித்திரம் படைப்போம்

வீரர் நாம்
வேகம்தான் எம் மூச்சு
மண்ணின் மைந்தர் நாம்
மானம்தான் பெரிது

கரிகாலன் வளர்த்தெடுத்த
கரும்புலிகள் நாங்கள்
கணப்பொழுதில்
விடியல் காண்போம்

கடலன்னை தத்தெடுத்த
கடற்புலிகள் நாங்கள்
கடலதிலும் காண்போம்
விடுதலை

வான்மகவு ஈன்றெடுத்த
வான்புலிகள் நாங்கள்
விண்ணேறிப் பெறுவோம்
வியத்தகு விடுதலை

தேசத்தின் குரலால்
நாளும் வளர்ந்தவர்கள் – நாங்கள்
ஞாலம் அதிர
ஈழவிடுதலை காண்போம்!

(உ)லோக நாதன்