தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.): மாவீரர்களின் பெயரால்… ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும்…

பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் – உலக நாதன்

ஈழவிடுதலை காண்போம்! விடுதலை என்பது விடுகதை அல்ல வெற்றியும் எளிதல்ல எலியாக நாம் வளை தேடவில்லை புலியாகிப் பகைவெல்ல புறப்பட்டுவிட்டோம் தடையினை உடைப்போம் தலைவனை மதிப்போம் மனதெங்கும் நிறைவான மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் எடுபடையெனவே படுகளம் ஆடும் பகையது கொன்று புதியதோர் சரித்திரம் படைப்போம் வீரர் நாம் வேகம்தான் எம் மூச்சு மண்ணின் மைந்தர் நாம் மானம்தான் பெரிது கரிகாலன் வளர்த்தெடுத்த கரும்புலிகள் நாங்கள் கணப்பொழுதில் விடியல் காண்போம் கடலன்னை தத்தெடுத்த கடற்புலிகள் நாங்கள் கடலதிலும் காண்போம் விடுதலை வான்மகவு ஈன்றெடுத்த வான்புலிகள்…