– புலவர் சா இராமாநுசம்

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்ட உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம் விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

-நன்றி : தொல்காப்பியன் தங்கராசன் முகநூல்