தலைப்பு-மீண்டும் தமிழீழம் -thalaippu_meendum thamizheezham

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்!

முள்ளி வாய்க்காலில் முடங்கிய தமிழினம்,

துள்ளி மண்மீட்கத் துணிவுடன் எழுந்து,

கள்ளச் சிங்களர் கயமைக்கு முற்றுப்

புள்ளி வைக்காமல் புலன்கள் ஓயாது!

முதிர்ந்த அறிவோடு தமிழினம் காத்திடும்,

மற்றொரு தலைவனை மீண்டும் பெற்று,

மாற்றுச் சிந்தனை அரசியல் செய்து,

முயன்று போராட்டம் தொடர்ந்து நடத்தினால்,

முன்பு வாய்க்காத மாபெரும் வாய்ப்புகள்

மலர்ந்து மணம்வீசி முகிழ்க்கும் ஈழம்!

சச்சிதானந்தம் தெய்வசிகாமணி