யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே!
யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே!
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாதொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்
… …. …
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல்
அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிர நாட்டல்
… ….
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்: வெள்ளைத் தாமரை
(படங்கள் : த.இ.க.கழகம், விக்கிபீடியா, அனைவருக்கும் கல்வி மாநாட்டறிக்கை & பல்லடம் தாய்த்தமிழ்ப்பள்ளி)
Leave a Reply