வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசுகடன்

1.

வடபுலத்தார்  தமிழ்நாட்டில்  வந்துகுடி  புகுந்தே

    வண்டமிழ  நாட்டகத்தில்  வாக்காளர்  ஆயின்

விடைகாண  முடியாத  நிலையாகும்  நிலத்தே

    ஈழநிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடும் தேர்க

கடனென்று  தமிழ்நாட்டை  ஆளுகின்ற அரசு

   காவிவட வருகையினைத் தடைசெய்து விட்டால்

நடமாடும்  பண்பாட்டின்  தொட்டிலாக விளங்கும்

   நற்றமிழ  இனப்பகையும்  நாட்விட்டே ஓடும் !

2.

எம்மதமாய்  எச்சாதி  எக்கட்சி  சார்ந்தே

     இருந்தாலும்  தமிழனென்ற  உணர்வு பொங்க  வேண்டும்

தம்மன்னை  தமிழென்ற  நினைவோங்க  வேண்டும்

    தம்பகையே  ஆரியமாய்த்  தாமுணர வேண்டும்

செம்மைமுதல்  செந்தமிழைச்  சிதைத்த  ழித்தல்  தேர்ந்து

   இனம்காக்க  அடர்புலிபோல்  எழுச்சியுற  வேண்டும்

செம்மாந்து  தமிழினமே  பீடுநடை போட

    இனப்பகையாம் ஆரியத்தை வேரறுக்க வேண்டும் !

                புலவர் பழ.தமிழாளன்,

        இயக்குநர்—பைந்தமிழியக்கம்,

                    திருச்சிராப்பள்ளி.