தமிழன் என்போன் யார்? – பழ.தமிழாளன்

தமிழன் என்போன் யார்? 1. தமிழ னென்றால் தன்மா னம்     தமிழ னென்றால் பகுத் தறிவு தமிழ னென்றால்  மறத்த ன்மை    தமிழ னென்றால் மாந் தவன்பு தமிழ னென்றால் உறவு டைமை    தமிழ னென்றால் கொடைத்தன்மை இமிழ்க திர்சேர் ஒளியாக      இருப்பான் தமிழ்ச் சேயாவான்! 2. மாற்றான் காலில்  மண் டியிட்டே    மண்ண கத்தே வாழ்ந் துகொண்டும் ஊற்றே  டுக்கும் சிந்த னையை     உள்ளந்  தன்னில் துறந்துவிட்டும் கூற்றம் அன்ன பகைவ னது    …

வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் –  புலவர் பழ.தமிழாளன்

வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசுகடன் 1. வடபுலத்தார்  தமிழ்நாட்டில்  வந்துகுடி  புகுந்தே     வண்டமிழ  நாட்டகத்தில்  வாக்காளர்  ஆயின் விடைகாண  முடியாத  நிலையாகும்  நிலத்தே     ஈழநிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடும் தேர்க கடனென்று  தமிழ்நாட்டை  ஆளுகின்ற அரசு    காவிவட வருகையினைத் தடைசெய்து விட்டால் நடமாடும்  பண்பாட்டின்  தொட்டிலாக விளங்கும்    நற்றமிழ  இனப்பகையும்  நாட்விட்டே ஓடும் ! 2. எம்மதமாய்  எச்சாதி  எக்கட்சி  சார்ந்தே      இருந்தாலும்  தமிழனென்ற  உணர்வு பொங்க  வேண்டும் தம்மன்னை  தமிழென்ற  நினைவோங்க  வேண்டும்     தம்பகையே  ஆரியமாய்த் …

இலக்குவனார் என்றும் வாழ்வார் ! – பழ.தமிழாளன்

தமிழ்க்காப்புக் கழகம் இணையவுரை தமிழ்ப்போராளி இலக்குவனார் நாண்                         மங்கல விழா திரு . ஆண்டு துலை( ஐப்பசி ) 27    13-11-2022 ஞாயிறு 10.00 மு.ப                       பாவரங்கம்       தமிழின மொழிநாட்டுப் போராளி         இலக்குவனார் என்றும் வாழ்வார் !      …

அறத்தமிழ்த்  தாயே  உறக்கம்  களைக ! – பழ.தமிழாளன்

அறத்தமிழ்த்  தாயே  உறக்கம்  களைக ! 1. மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே !      மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல்  கண்டும்     நீருறக்கம் கொள்ளுவது  நன்றாமோ சொல்க பாத்திறத்த   பைந்தமிழ  இனமதனை வீழ்த்திப்     பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில்   கண்டும் பூத்திருக்கும்  தூக்கமதன்  பூவிழியால் கண்டே     பகைத்தமிழ  ஆரியரைப்  பாரைவிட்டே ஓட்டு ! 2. இனத்தமிழ  இனமதனை  அழிப்பதற்குப் பாரில்     எடுபிடியாம்  சில்லறையை  இணைத்துவைத்தே  இன்பக் கனவுகண்டே  ஆடுவதைக்  களையெடுத்தே  ஓட்டல்     கதிரொக்கும் …

பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்   பகலவனே ! – பழ.தமிழாளன்

பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்                     பகலவனே ! 1. மனுநூலை  நம்பவைத்து  மக்களையே             மடமைதனில்  ஆக்கி  வைத்த     மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்          தோலுரித்த மாண்பின்  மிக்கோன் பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை           மணக்காதே  வைத்த  பெம்மான்      பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி                    அமர்ந்திருந்த  ஆரி  யத்தை நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்                     கோலாலும்  வென்ற  வீரன்       நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்              ஆரியத்தை விரட்டி  வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்                        மூச்சுக்காற்  றாக  மாறித்   …

கலைஞர்   என்றும்  கதிராய்   ஒளிர்வார் !– பழ.தமிழாளன்                                                           

கலைஞர்   என்றும்  கதிராய்   ஒளிர்வார் ! 1. திருக்குவளை  எனுமூரில்   அஞ்சுகத்தாய்                   முத்துவேலர்  அன்பால் ஒன்றி   ஆற்றலுருக்  கொண்டாரை  அருமைந்             தாய்க்  கலைஞரையே  ஈன்றெடுத்தார் திருவாகும்  கல்வியினைத் தேடுகையில்                 செந்தமிழிற்    பற்றுக்  கொண்டும்      ஈரோட்டுப்  பெரியாரின்  ஈடில்லாப்         பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும் பெருமைமிகு  அண்ணாவின் பீடுநிறை      உணர்வதனைப் பெற்றுக் கொண்டும்     பைந்தமிழ   நாடதனில்  பாங்குறவே                     ஐந்துமுறை  முதல்வ  ராகி இருளடிமைத்  தீவீழ்ந்த  இனமதனை         எழுகதிராய்  எழவும்  வைத்தோர்     ஈடிணையும்  இல்லாதே …

தமிழினத்திற்கு   வாழ்வா ?   சாவா ?  – புலவர் பழ.தமிழாளன்

தமிழினத்திற்கு   வாழ்வா ?   சாவா ?   1. அன்றுதொட்டே  இன்றுவரை அறத்தமிழை  இனத்தினை    அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன் நன்றிகொன்று  நாடோறும் ஞாலமதில்   வாழ்பவர் நடுநிலையும் நயன்மையையும்  நாடாத   இனமதே  இன்றுமுற்றாய்  அழிப்பதற்கே  ஏறியுமே ஆட்சியில் இயற்றுகிற  சட்டமதை  எண்ணியுமே காத்திட ஒன்றிணைய  வேண்டுமென்றே உள்ளமதில்   தேருக ! ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும்  அழியுமே ! 2. தனதுநலம்  புறந்தள்ளித்  தமிழினத்தைக் காப்பதே தலையாய  கடனென்று  தமிழினமே  உணருதல் தனதுநல  முதற்படியாய்  நெஞ்சமதில் தேருக ! தமிழ்மொழியே  தன்னினத்தைக் காக்கவல்ல  தென்றுமே தனதுநெஞ்சில் …

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! – பழ.தமிழாளன்

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! 1. தமிழ்ப்பகை கால்வீழ்வான் நற்றமிழ                                                   னாகான் உமிழும்வாய்   எச்சி    உணர். 2. தன்மானம்   அற்றே    தகுசீர்  பகுத்த                                                 றியான் என்னிருந்தும்  இல்லானே  தேர். 3. ஈராயிரம்   ஆண்டின்    தமிழ்ப்பகை                                        கால்வீழ்வான் தேரான்   தெளிவில்லான்  தேர். 4. இனம்வீழ்த்த  எண்ணிடும்  ஆரியத்தின்                                                       தாளை மனமொப்பிச்  செல்வானே   மண். 5. நற்றமிழை   முற்றுமே   ஞாலத்                                           தழிப்பானைப் பற்றுவான்   என்றும்   பதர். 6. ஈன்றெடுத்த  தாயை  இழிவுசெய்வான்                                           கால்வீழ்வான் மாண்பில்   மகனாவன்   மன்…

இன்று  மகாராட்டிரம்,  நாளை  தமிழகமா? – பழ.தமிழாளன்

இன்று  மகாராட்டிரம்  நாளை  தமிழகமா? குடியாட்சி  மாண்பதனைக்  குப்புறவே            கவிழ்க்கின்ற  காட்சி  தன்னைக்     கொள்கையற்றே  ஒன்றியத்தை ஆளு        கின்ற ஆட்சியினர்  இற்றை நாளில் முடிமன்னர்  போலவுமே  மகாராட்டி         ரமாநிலத்தின்  ஆட்சி  தன்னை முற்றாக முடிப்பதற்கு  முனைப்போடு          செயல்புரியும்  காட்சி  காண்க அடிமையென  மக்களையே  ஆக்குகின்ற           ஆரியத்தின்  சூழ்ச்சி  தன்னை     அடல்மறவத்  தமிழினமே  அகமதிலே            பதியாதே  இருப்பார்  என்றால் விடிந்திருக்கும்  நிலைமாறி  விடியாத          இருள்சூழ்ந்த  நிலையே  ஒக்கும்      வெல்தமிழ  இனமெல்லாம்  விழிப்…

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033) தமிழர் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்   தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரை: பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர், …