வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்
வன்மை எனக்குஅருள்வாய் !
அன்புள்ள இறைவனே
என்வேண்டுதல் கேட்டருள்வாய்
வன்மை எனக்குஅருள்வாய் – நீ
எண்ணும் முடிவை ஏற்பதற்கு
பொறுத்தருள்வாய் என்னை நீ – நான்
வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின்
எனை அழைத்திடல் ஏற்றதென
நினைத்திடில் உடனே நீ
வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல்
கழிபேரன்பு கொண்டோர்க்கே
என்றனுக்கு உதவிடுவாய்
தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே
ஏனென்று கேட்பையோ
உன்விழைவே சாலச்சிறந்ததுஎன
ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும்
உதவிடுவாய் ஓ இறைவா
அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய்
உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும்
அச்சத்தினாலன்று
என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே
– இளவல்
குறிப்பு: மரணப்படுக்கையில் இருந்த சிறுமியின் ஆங்கிலக்கவிதை ஆங்கில இதழ் ஒன்றில் வந்திருந்தது. அதன் மொழிபெயர்ப்பு. சிறுமியின் பெயர், இதழின் பெயர் நினைவில்லை.
Leave a Reply