தலைப்பு-வளந்தரும்வாழ்த்து : thalaippu_valam_

வளந்தரும் வாழ்த்து

சுண்ணச் சுவர்கள் மின்னலிட
வண்ணக் கோலம் பலவகையாக
மாவிலைத் தோரணம் காற்றாட
மல்லிகைச் சரங்கள் மணந்தாட

கொஞ்சும் புத்தாடை குதுகலமாக
மஞ்சள் இஞ்சி மங்கலமாக
பச்சரிசி பொங்கல் பளபளக்க
கட்டிக் கரும்பு நாவினிக்க

தந்தையும் தாயும் வாழ்த்திட
சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட
இல்ல மகளிர் யாவருமே
விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க

உற்றார் உறவினர் ஒன்றுகூடி
பற்றுடன் பொங்கலோ பொங்கலென
தமிழர் திருநாளில் குடும்பமுடன்
தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே.

. . . தமிழகத்தாய்க்குழு . . .

பொன் தங்கவேலன்