தலைப்பு-வாழிநெஞ்சே :thalaippu_valaiyapathi

 நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து

கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே

கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்

காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே

காலக்கனலெரியின் வேவன கண்டாலும்

சால மயங்குவ தென்வாழி நெஞ்சே

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்

மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே

மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே

உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே

உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல்

சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே !

வளையாபதி