வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்
வாழ்க்கை என்பது போராட்டம் – எனில்
போரில் கலந்து வென்றிடுவோம்
வாழ்க்கை என்பது விளையாட்டு – ஆயின்
ஆடி வாகை சூடிடுவோம்
வாழ்க்கை என்பது பயணம் – ஆனால்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்
வாழ்க்கை என்பது கேளிக்கை – என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்
வாழ்க்கை என்பது கணக்கு – எனவே
போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம்
வாழ்க்கை என்பது வரலாறு – அதனால்
செம்மைச் செயலைப் பதித்திடுவோம்
வாழநாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்.
Leave a Reply