வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்

வாழ்க்கை என்பது போராட்டம்   –  எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு –  ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம்        –   ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை  –     என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு       –  எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு          – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல…

செந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி. தந்தை: ஆறுமுக(முதலியார்). தாய் : தங்காள். ஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம். படிப்பு : ஐந்தாம் வகுப்பு. திருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார். மணமகளின் தந்தை : வையாபுரி தாய் : விருத்தம்பாள். ஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 9

  –    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முன் இதழ்த் தொடர்ச்சி) 5. அரசியல் வாழ்க்கை பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது.  ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்’ என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.  முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் தமிழர்கள் மன்பதை வாழ்க்கையில் முன்னேற்ற நிலையை அடைந்திருமையை உணரலாம். அவர்களின் அரசியல் வாழ்வும் பின்தங்கியதன்று. தொல்காப்பியர் வாழ்க்கையையும் இலக்கியம் போல் அகம்,…