வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!
வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு,
தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு,
வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு,
காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு!
வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட,
சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!
வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!
வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன்,
வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு!
வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே,
வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய்,
வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய்,
வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும் பாய்கிறதே!
மூச்சிழுத்து உள்நிறுத்தி உறுதியோடு நின்று,
மாற்றங்களை முன்னெடுக்க மறுப்பவர்கள் எல்லாம்,
மூட்டுடைந்து முடமாகி, பேச்சிழந்து பிணமாகி,
மனமுடைந்து கலங்கும்நாள் மிகஅருகில் உள்ளதே!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Leave a Reply