mullainilavazhakan

(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி)

காட்சி – 9

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்     :       மரக்கிளை

நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச்

சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ

                     பட்டென இருளைக் கிழித்தாற்போல்

                             பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது)

ஆண் :     அன்புப் பேடே!

அறுசுவை உணவை கணவனுக்குத்

திருமகள் வடிவாய் வந்திங்கு

நன்றே படைத்தைப் பார்த்தாயா?

என்றே ஒருவர் கேட்பதைப்பார்!

பெண்     :     உணவேயின்றி உருக்குலைந்து

நாளும் மக்கள் வாடிவிட

எப்படி இவ்வகை செய்வதென

தப்பாமல் மற்றவர் உரைப்பதைக் கேள்!

நாடகந்தானே! தெரியலையா?

போடா! புத்தியற்றவனே!

வேறு எப்படி இருந்துவிடும்!

கூறும் ஒருவரின் கூற்றும் கேள்!

ஆண் :     எதுவோ? என்னவோ? பேசட்டும்!

இதற்கா! இங்கு நாம் வந்தோம்?

 

(காட்சி முடிவு)

two-sparrows09

(பாடும்)