எண்ணிக்கை

 

ஒன்று – உலகின் சூரியன் ஒன்று!

இரண்டு – இரவு பகலென் றிரண்டு!

மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று!

நான்கு – நாட்டில் பருவம் நான்கு!

ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து!

ஆறு – அருசுவை வகைகள் ஆறு!

ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு!

எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு!

ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது!

பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!

 

 இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள்  பக்கம் 33