ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்

ஏழு வண்ணங்கள்   அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37

சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்

சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?  சீக்கிரம் நீசொல்லு!   குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்  புன்னகைப் பூக்கள்  பக்கம் 36

விளையாட்டு – சந்தர் சுப்பிரமணியன்

விளையாட்டு பந்துருட்டி ஆடுகின்ற பாலகர்கள் ஓர்புறம்! பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம்!   மூச்சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம்! பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம்!   தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம்! விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம்!   எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே! மட்டிலாத இன்பமுண்டு! வாட்டமென்ன? வாஉளே!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்  புன்னகைப் பூக்கள்  பக்கம் 35

வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ! – அட! வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ! விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ! – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ!   தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ! – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 34

எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை   ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம்…

அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்

அகரப் பாடல்   அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் :  பக்கம் 32

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்   தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது!   சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்!   வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…

வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணப் படம்   வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!   காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்!   கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 29…