சுந்தரமூர்த்தி கவிதைகள்
சுந்தரச் சிலேடைகள்

 

சிலேடை 2.  நிலவும் கங்கையும்

ஓடும் வளமாக்கும் ஓங்குமீசன் மேலிருக்கும்
நாடும் குளிர்வாய் நலந்தரும் -தேடும்
புலவரின் நாளமெல்லாம் பூத்துக் குலுங்கும்
நிலவொடு கங்கை நிலைத்து.

பொருள்:
கங்கை

மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும்.
நிலத்தை வளமாக்கும்.
ஈசன் தலையில் இருக்கும்.
நாடு நீர்ச்செழிப்பத்தால் குளிர்ச்சி அடையும்.
எல்லா உயிர்க்கும் நலம் பயக்கும்.
புலவர்கள் பாடுமாறு அமையும்.
கங்கை பாயுமிடமெல்லாம் செடிகொடிகள் பூத்துக் குலுங்கும்.

நிலவு

கிழக்கிருந்து மேற்காக ஓடும்.
ஈசன் தலைமேலிருக்கும்.
காதலர்களுக்கும் மலர்களுக்கும் வளந்தரும்.
ஆதவன் வெப்பத்தில் காய்ந்த அனைத்துயிர்க்கும் குளிர்வையும் , மகிழ்வையும் தரும்.
புலவர் போற்றிப் பாட காரணமாக அமையும்.

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி