தலைப்பு-தனித்தமிழ்ப்பாடல் போடடி - thalaippu_thanithamizhpaa_poatti

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

 மொத்தப் பரிசு உருவா 1050.00

கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016

சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள்

5 எழுதி அனுப்ப வேண்டும்!

முதற்பரிசு உருவா 300.00

இரண்டாம் பரிசு உருவா200.00

மூன்றாம் பரிசு உருவா150

ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு.

நெறிமுறைகள்:

1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும்

3.பாடல்கள் மதநம்பிக்கை தவிர்த்த எப்பொருளிலும் இயற்றப்படலாம்.

4.பாடல்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில் மட்டும் பெயர், முகவரிகள் இருக்கலாம். இன்னொரு படியில் வெறும்பாட்டு மட்டுமே இருத்தல் கட்டாயம்.

5.தழுவல், மொழிபெயர்ப்புகள், முன்னரே வந்தவை, ஏடுகளில் வெளிவந்தவை ஏற்கப்படா

6.தேர்ந்தெடுக்கப்படும் பாடல்கள் வெல்லும் துாயதமிழ் மாதஇதழில் வெளியிடப்படும். சிறுவர்பாடற் சிறப்பிதழ் விலை உருவா 20.00

vellum-thooyathamizh-muthirai01

7.போட்டி முடிவுகளை மாசி 16, 2047/28.2.2016இல்  தொலைபேசி வழியாகக் கேட்டு அறியலாம்.

8.பாடல்கள் தாளின் ஒரு பக்கம் மட்டுமே தெளிவாக எழுதப்பெற வேண்டும். பயன்படுத்தும் தாள் புதிதாக இருக்கட்டும்

பாடல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

thamizhamallan03

முனைவர் க.தமிழமல்லன்,

தலைவர், தனித்தமிழ்இயக்கம்,

66, மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி,

புதுச்சேரி 605009

தொலைபேசி 0413-2247072,

அலைபேசி 9791629979