கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே!

எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே!

தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே!

சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க!

வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ

வாழ்க! வாழ்க! வாழ்க!

 

மண்ணும் மொழியும் இனமும் காக்கும்

மறவன் நீ அன்றோ!

விண்ணும் மழையைத் தூவி உன்னை

வாழ்த்தும் நாள் இன்றோ!

எண்ணும் செயலை முடிக்கும் அறிவின்

ஏற்றம் நீயன்றோ!

வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே!

வாழ்க நீ நன்றே!

(கங்கை கடாரம்…)

மன்னன் பிரபாகரனாய் என்றும்

மக்களை ஆள்பவனே!

அன்னை ஈழம் மீட்ட எங்கள்

அண்ணன் நீயன்றோ!

தென்னவன் நிலந்தரு திருவிற் பாண்டியன்

நெடியோன் நீயன்றோ!

தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய

தலைவா நீ வாழ்க!

வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ

வாழ்க! வாழ்க! வாழ்க!

https://youtu.be/oys6m5uy5zk

 

நிலவன் – வாகைத் தொ.கா.(NILAVAN-VAAKAITV VTV)

தரவு :

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan