தலைப்பு-மேன்மையாய் வாழ்ந்திடுவோம் : thalaippu_menmaiyaayvaazhvoam_chanthira-sekar

மேன்மையாய் வாழ்வோம்!

செய்திகள் படிப்போம்
சிந்தனை நிறைப்போம்!
கைத்தொழில் கற்போம்
கவலையை ஒழிப்போம்

பொய்சூது விடுவோம்
போதும்மனம் கொள்வோம்
மெய்யைப் பேசுவோம்
மேன்மையாய் வாழ்வோம்!

வைகறை விழிப்போம்
வாய்விட்டுச் சிரிப்போம்!
பைகாசு வைப்போம்!
பைய நடப்போம்!

வாய்மை காப்போம்
வாக்கு நிறைவேற்றுவோம்!
தாய்மை போற்றுவோம்!
தாரத்தை ஆராதிப்போம்!

நாய்தனை வளர்ப்போம்!
நன்றியை மறவோம்!
வாய்ச்சவடால் செய்யோம்!
வாலிபனாய் வாழ்வோம்!

எய்அம்பாய் மெய்செய்வோம்!
எங்கும்சென்றே நலமாக்குவோம்
நய்நய்என நச்சரியோம்!
நண்பர்களைச் சேர்த்திடுவோம்!

பாய்விரித்தே படுத்திடுவோம்
பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்!
நோய்நொடி விரட்டிடுவோம்
நூறைக்கடக்க வழிகண்டோம்!

மாம்பலம் ஆ.சந்திரசேகர் எழுத்தாளர்