இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை

கார்த்திகை 22, 23& 24, 2048  /  8,9,10 திசம்பர் 2017
இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்

 

பேரன்புடையீர்,

வணக்கம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்:

இரட்டைக் காப்பியங்கள்

துணைக் கருப்பொருள்:

1. இரட்டைக் காப்பியங்களில் வெளிப்படும் மனிதநேயம்
2. காப்பியங்களில் முற்போக்குச் சிந்தனைகள்
3. காப்பியங்களில் காணப்படும் மேலாண்மைக் கருத்துகள்
4. காப்பியங்களில் காணப்படும் சமூகச் சீர்த்திருத்தங்கள்
5. காப்பியங்களில் காணப்படும் சமூக ஒருமைபாடு
6. காப்பியங்களுக்கான சமூகப் பின்புலம்
7. காப்பியங்களில் காணப்படும் பெண்களின் எதிர்காலவியல்
8. மொழியியல் நோக்கில் காப்பியங்கள்
9. காப்பியங்களுக்குத் தரவக உருவாக்கம்
10. காப்பியங்களைப் பயிற்றுவிக்கும் முறை
11. காப்பியங்களை ஆவணப்படுத்துதல்
12. காப்பியங்களில் காணும் பண்பாடு
13. உளவியல் நோக்கில் காப்பியங்கள்
14. காப்பியங்களில் அரசியல்
15. காப்பியங்களில் சமயக் கோட்பாடுகள்
16. காப்பியங்களில் அறிவியல் சிந்தனைகள்

இவை போல இன்னும் பிற


ஆய்வுக் கட்டுரைகள் இக்கருப்பொருளைக் கொண்டே அமைந்திருக்க வேண்டும். மாநாட்டின் முழுக் கட்டுரையையும் ஐப்பசி 30, 2048 / 15 நவம்பர் 2017 ஆம் நாளுக்குள் 5-6 பக்கத்திற்குள், ஏற்பாடு குழுவினரிடம் அனுப்பிவிட வேண்டும். (அழைப்பிதழில் நவம்பர் 3 என்று உள்ளது.)

ஆய்வுக் கட்டுரையைப் பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

 < cpc.kaappiyam@gmail.com >

தொடர்பிற்கு : –

தமிழ்த்திரு தனேசு பாலகிருட்டிணன் – +6014-327 9982
பேராசிரியர் முனவர் சு.குமரன் – +6012-312 3753
பேராசிரியர் முனைவர் அ.காமாட்சி – +91 94 42022507
முனைவர் கா.உமராசு – +91 94 87223316
முனைவர் பா.தேவகி – +91 97 1000 7577