vaikowithtop01

 சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து வைகோ பேசியது வருமாறு:

தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரியில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற முடியாத நிலை பெரியார், அண்ணா, காமராசர் காலத்தில் இல்லை. மூவரும் இல்லாதக் கவலையில் நான் இப்போது பேசுகிறேன்.

soniaandkalaiganar01சிசிலிய இரத்தம் ஓடுகின்ற சோனியா காந்தி தலைமை தாங்குகின்ற காங்கிரசுக்கட்சி, வரலாற்றின் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்படும். ஆனால், நமக்கு எப்போது நீதிகிடைக்கும்?- ஈழத்திற்கு எப்போது  நீதி கிடைக்கும்?

நம் தொப்புள் கொடி உறவுகளை,  பச்சிளம் பாலகர்களை  ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்தானே அவனுக்கு ஆயுதமும்,பணமும் கொடுத்தது இந்திய அரசு. செய்மதிப்படப்பொறிகளின் உதவியோடு புலிகளின் நகர்வுகளை வேவு பார்த்து, அவர்களைத்  துல்லியமாகத் தாக்க ஏற்பாடு செய்து கொடுத்தது இந்தியா. கடல் புலிகளுக்கு வந்த 14 கல்பபல்களை மூழ்கடித்தது இந்தியக் கடற்படை.

 eezham-genocide01

தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். அத்தனையும் ஒளிப்படங்களாக ஆவணங்களாக உளளன. ஒரு சிங்களச்சிப்பாய் தன்அலைபேசியில் பதிவு செய்த காட்சிகள் இப்பொழுது கிடைத்து உள்ளன. அதைப்பார்க்கவே முடியவில்லை. தமிழ்ப்பெண்களைக்கூட்டம் கூட்டமாக நாசப்படுத்துகிறார்கள். பிறகு கழுத்தைக்கீறிக்  கொலை செய்கிறார்கள்.

அதன்பிறகும் உயிர் அற்ற சடலங்களைக் கொண்டு வந்து அம்மணமாகப்  போடுகிறார்கள். இதுவரைக்கும்தான் பார்க்க முடியும். அதற்குமேல் அவர்கள் செய்கின்ற கொடுமைகளைப் பார்க்கவே முடியாது. ஒரு சிலவற்றை யசுவந்து சின்காவிடம் காண்பித்தேன். அவர் பார்க்க இயலாது என்று சொல்லி விட்டடார். துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருக்கின்ற ஈட்டி முனைகளால் என்  நாவால் சொல்ல முடியாததைச் செய்தார்கள. eezham-genocide02

இந்தக் காட்சி செனீவாவில் திரையிடப்பட்டது. இதற்குப்பிறகுதான் பாகிசுதான் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை விவாதிக்கக் கூடாது; வாக்குக்கு விடக்கூடாது; ஒத்தி வைக்க வேண்டும் என்று பாகிசுதான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

 ஆனால், உலகத்தின் பல நாடுகள் இந்தக் கொடுமைகளைக் கண்டித்து பாகிசுதான்  தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. அந்தத் தீர்மானம் தோற்றுப் போனது.

 இரண்டாவது ஒரு தீர்மானத்தைப் பாகிசுதான் கொண்டு வந்தது. பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீக்க வேண்டும் என்று ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்ததது. இதையும் ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதையும் உலக நாடுகள் தோற்கடித்தன. மூன்றாவதாக அமெரிக்கத் தீர்மானத்தையே ஒத்தி வைக்கவேண்டும் என்றார்கள். கியூபா, வெனிசுலா, பாகிசுதான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவேயில்லை.

சேலத்து மண்ணில் இருந்து நான் கேட்கிறேன். இதேபோன்ற கொடுமை இநதியாவின்  வேறு எந்த மாநிலத்திற்காவது நேர்ந்து இருந்தால், இந்தியா இப்படி வாக்கு அளித்து இருக்குமா? மன்னிக்க முடியுமா  இந்தத்  துரோகத்தை? சோனியா காந்தி என்ற சிசிலிய இரத்தம்  ஓடுகின்ற ஒரு பெண்மணி ஆட்டி வைத்து, மன்மோகன் சிஙகைக் கைப்பொம்மையாக்கி, அவரை ஒன்றுக்கும் உதவாத செல்லாக்காசாக ஆக்கி இத்தனை ஆண்டுகள் ஆட்டிப் படைத்த சோனியாகாந்தியைப் பிரதம்ர்  ஆக்க வேண்டும் என்று நான்தான் சொன்னேன் என்று ஓங்கிஅடித்துச் சொல்லுகின்ற கலைஞர் அவர்களே! பெரியாரின் கல்லறையில் இருக்கின்ற எலும்புகள் உங்களை மன்னிக்குமா?

கடற்கரையில் கண்ணுறங்கும் அண்ணாவின் எலும்புகள் உங்களை மன்னிக்குமா?  இப்படிஎல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது?

 இந்த நிமிடம்கூடத் தமிழ் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பிரபாகரனின் அரசு இருந்தபோது அங்கே மது இல்லை, களவு இல்லை, பரத்தமை இல்லை, இன்றைக்குத் தமிழ் இளைஞர்களிடம் மதுவைத் திணிக்கின்றார்கள். ஈழத்துத் தமிழர்கள் பழந்தமிழர் பண்பாட்டைப்பாதுகாத்து  இருக்கின்றார்கள் என்று நான் உலகெங்கும் பெருமிதமாகச் சொல்லி வருகிறேன். எல்லாவற்றையும் பாழாக்கிய காங்கிரசை மன்னிக்க முடியுமா?

நடைபெற உள்ள தேர்தலில், தமிழகத்தில் பாசக கூட்டணி 39 இடங்களில் வென்றால் தான் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும். இதுதேர்தலைக் கடந்த எனது சொந்தக் கருத்து. மோடி தலைமையாளரானால் – பிரதமரானால்- இந்தக் கொடுமைகளில் இருந்து விடிவு காலம் பிறக்கும். ஈழத்துக்கு நீதி கிடைக்கும்.

ஐ.நா. மன்றத்தில் பாகிசுதான் கொண்டு வரும் தீர்மானங்களை இந்தியா ஆதரிக்கும் நிலை இப்போது உள்ளது. பாசக ஈழத்தை ஏற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மோடி தலைமையாளரானால் – பிரதமரானால், வாசுபாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை மீண்டும் கடைப்பிடிக்கப்படும்.

இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம், பணம் கொடுத்தாலும் ஆயுதம் தர மாட்டோம் என்றார் வாசுபாய். அதைப் போன்றே மோடியும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். பாசக கூட்டணி வென்றால் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த ஆசையும் எனக்கு இல்லை. தமிழகத்தைக் கேடுகளில் இருந்து மீட்க மோடியை ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் வைகோ. தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசு  முதலான ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

klsudeesh01